Monday, September 10, 2012

பொறாமை

அன்று மாணவ தலைவனை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு.
ராமசாமியும் கண்ணனும் தலைவருக்கான போட்டியில் இருந்தனர். ராமசாமி நன்றாக படிக்கும் மாணவன் ஆனால் கண்ணன் சுமாராக படிக்கும் மாணவன் ஆனால் அனைவருடனும் நல்லா பழகும் குணமுடயவன். வகுப்பில் உள்ள மாணவர்கள் மொத்தம் 40. வாக்குபதிவில் வெற்றி கண்ணனுக்கே. ராமசமியை அவன் ஆசிரியர் உட்பட அனைத்து மாணவர்களும் கேலி செய்தனர். இதனால் மனம் உடைந்த ராமசாமி அனைத்து மாணவர்களின் மீதும் வெறுப்பு கொண்டான். கண்ணன் மீது பொறாமை கொண்டான்.

ராமசாமியின் வாழ்வில் இது மிகவும் கடினமாக இருந்த காலம். யாரைகண்டாலும் வெறுப்பு இதனால் அவன் தனிமையை நாடினான். தனிமையில் பல்வேறு எண்ணங்கள் அவன் மனத்திரையில் ஒடின. பெரும்பாலும் கண்ணன் மீது இருந்த பொறாமை உணர்வே. அதனால் அவன் கண்ணனை பழிவாங்க எண்ணினான். அதற்க்கு அவன் செய்த காரியம் மிகவும் மோசமான ஒன்றாகும். அவன் தன்னுடைய வீட்ற்கு அருகில் இருந்த பொது தொலைபேசி நிலயத்தில் இருந்து தன்னுடைய பள்ளிக்கு போன் செய்தான். பொனை மறுமுனையில் எடுத்த முதல்வர் வணக்கம் சொல்லுங்க என்றார்.

உங்க பள்ளியில் வெடிகுண்டு இன்னும் அரைமணி நேரதில் வெடிக்கும் முடிந்தால் ஓடிவிடு என்று கூறி போனை வைத்துவிட்டான்.

இதைக்கேட்ட முதல்வருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் படபடப்புடம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தார். அவர்முகம் வெளிரி காணப்பட்டது. இதை கண்ட மற்ற ஆசிரியர்கள் முதல்வரை வினவினர். அவர்களிடம் நடந்ததை கூறி அனைத்து மாணவர்களையும் வகுப்பைவிட்டு வெளியேறுமாறு ஒலிபெருக்கியில் கூறினார். பதறி அடித்துக் கொண்டு அனைத்து மாணவர்களும் வகுப்பைவிட்டு வெளியேறினர். அப்போது ஒரு மாணவன் கீழே தவறி விழுந்து விட்டான். அவனுக்கு காலில் நல்ல காயம். சிறிது நேரத்தில் மணவ்ர்களின் பெற்றோரும் அங்கு குவிந்தனர்.அந்த இடம் முழுவதும் ஒரே பதற்றமாக காணப்பட்டது. சில பெற்றோர் மயங்கி விழுந்து விட்டனர்.

ஆபத்துக்கள்:
(ராமசாமிக்கு)
பிறர் துன்பத்தில் இன்புரும் குணம் வளர்தல் 
சமூக வெறுப்பு
சமூக குற்றம் செய்யும் எண்ணம்

என்ன செய்ய வேண்டும்/ என்ன செய்ய  கூடாது : 
பலர் மத்தியில் கேலி செய்யக் கூடாது
துணை தலைவர் பொறுப்பு கொடுக்க வேண்டும்.
மாணவர்களிடம் போட்டி மனப்பான்மையை நல்வழிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.






No comments:

Post a Comment