Friday, September 21, 2012

வாய்ப்பை தவறவிடுதல்

ஒரு நாள் தனது விவசாய வேலை நிமித்தமாக மிகவும் சீக்கிரமாக சென்றான் ராமசாமி. அவன் சென்ற போது மிகவும் அதிகாலை என்பதால் இருட்டாக இருந்தது. சரி வெளிச்சம் வரும் வரை காத்திருப்போம் என்று தனது வயல்வெளிக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு குளக்கரையில் அமர்ந்தான் ராமசாமி அப்போது அவன் அருகில் ஒரு சாக்கு மூட்டை நிறைய சிறு சிறு கற்கள் போன்று இருப்பதை கண்டான். அவன் ஒவ்வோரு கல்லாக எடுத்து குளத்தினுல் எறிந்தான். நேரம் ஆக ஆக அந்த சாக்கு மூட்டையில் இருந்த அனைத்து கல்லையும் எறிவதற்கும் சூரியன் உதிப்பதற்க்கும் சரியாக இருந்தது. கடைசியில் அவன் கையில் ஒரே ஒரு கல்மட்டும் இருந்தது வெள்ச்சத்தில் அந்த கல் மின்னியது. அப்போது தான் அவனுக்கு தெரிந்தது அது ஒரு விலைமதிப்பில்லாத மரகத கல் என்று.

ஆபத்துக்கள்:
அலச்சிய மனப்பான்மை
தேவையில்லாத செயலை செய்தல்
தேவையில்லாதவற்றை பேசுதல்
ஒருவரின் உண்மையான குணம் தெரியாமல் குறைகூறல்

என்ன செய்ய வேண்டும்
புரிந்து கொள்ள வேண்டும்
தேவையானதை மட்டும் பேசவோ அல்லது செய்யவோ வேண்டும்

No comments:

Post a Comment