Friday, August 31, 2012

தர்ம அடி

தர்ம அடி
ஒரு நாள் தனது வழக்கமான வேளை நிமித்தமாக ராமசாமி சாலையில் சென்று கொண்டு இருந்தான். அப்போது எதிரெ வந்த ஒரு ஆட்டோ அவன் காலின் மேல் ஏறி விட்டது. வலியினால் அந்த ஆட்டோகாரனை நோக்கி சென்சார் வார்தையால் திட்டிவிட்டான். 

உடனே அந்த் ஆட்டோ காரன் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு ராமசாமியை நோக்கி வந்து ஏண்ட ஆட்டோ போர பக்கம் நீ தவறா வ்ந்துட்டு என்னைய திட்டுறயா என்று கூறிவிட்டு ராமாசாமியை டபுல் சென்சார் அர்ச்சனையையும் பொழிந்து விட்டு ஒரு அடியும் அடித்து விட்டான். 

இதை சற்றும் எதிர்பாராத ராமசாமி அந்த ஆட்டோக்காரனை நடுக்கத்துடன் நீங்க தான் ஒன் வே பதையில் தவறா வந்திங்க ஆன என்னை அடிக்கிரிங்க நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட என்று சொன்னான். 

இதை கேட்ட அந்த ஆட்டோகாரன் இருட வர்ரேன் .... என்று கூறிவிட்டு தனது செல்போனை எடுத்து யாருக்கோ போன் செய்து வரச்சொன்னான். 

சிறிது நேரத்தில் மேலும் சிலர் இரண்டு ஆட்டோக்களில் வந்தனர். அவர்களிடம் ஆட்டோகாரன் மச்சான் இவன் ராங்கா பேசுரான்டா என்றான்.
வந்தவர்களில் ஒருவன்
டேய் நீ எந்த ஏரியா டா?
உன் பேரு என்னடா?
உனக்கு அவ்வளவு திமிரா என்று சொன்னான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ராமசாமி நடந்தவற்றை கூறினான். அவர்கள் அவன் சொல்வதை கேட்டதாக தெரிய வில்லை. ராமசாமி ஒருவன் கன்னத்தில் அறைந்தான், உடனே மற்றவர்களும் சேர்ந்து கொண்டு ராமசாமியை துவம்சம் செய்தனர். வலியினால் துடித்தான் ராமசாமி. சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.


ஆபத்துக்கள்:
(ராமசாமிக்கு)
மன உளச்சல்
தாழ்வு மனப்பான்மை
சமூக வெறுப்பு

என்ன செய்ய வேண்டும்:
துன்பத்தை பகிற்தல் வேண்டும்
ஆட்டோகாரர்களை மனதிரையில் கொண்டு வந்து அவர்களை சினிமாவில் காட்டுவதுபோல் அடித்து துவம்சம் செய்வது போன்று காண வேண்டும்.
நண்பர்கள் இதைவிட கொடுமையான நிகழ்வுகளை கூறி தேற்ற வேண்டும்.
மன்னிப்பவன் பெரியமனிதன் என்று கூறி தேற்ற வேண்டும்.
அந்த நிகழ்வினை மறக்க வேண்டும்.

No comments:

Post a Comment