Friday, August 31, 2012

கோபம்

கோபம்
ஒரு நாள் தன் மகனை கூட்டிக்கொண்டு ஞானியை கான சென்றார். அந்த தந்தை ஞானியிடம் .. தன் மகன் மிகவும் கோபம் கொள்வதாகவும் அதற்கு தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். 
அந்த பையனை பார்த்த ஞானி தன் அருகில் வருமாறு அழைத்தார். 
பின் அந்த பையனிடம் உனக்கு எப்போதெல்லம் கோபம் வருகின்றதோ அப்போதெல்லம் உன் வீட்டு சுவற்றில் ஒரு ஆணியை அறைந்து வைக்குமாறு   கூறினார். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த சிறுவன் அந்த ஞானியை பார்க்க வந்தான். 
ஐயா என் அறையில் இருந்த சுவர் முழுவதும் ஆணியால் நிறம்பிவிட்டது என்றும் ஆனால் இப்போதெல்லம் நான் கோபம் கொள்வது இல்லை நான் என்ன செய்ய என்று கேட்டான். அதற்க்கு அந்த ஞானி நீ அமைதியாக இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு ஆணியை பிடிங்கி விடு என்றார். 

சரி என்று கூறிய அந்த சிறுவன் அங்கிருந்து சென்றான். மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு மிகவும் அமைதி நிறம்பியவனாக அந்த ஞானியை கான வ்ந்தான். அவன் ஞானியிடம் ஐயா நான் இப்போதெல்லம் கோபம் கொள்வதே இல்லை அதனால் எனது அறையில் இருந்த அனைத்து ஆணியையும் பிடிங்கிவிட்டேன் என்று கூறினான்.

இதை பொறுமையாக கேட்ட ஞானி அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு அவன் அறைக்கு சென்றார். அங்கு அந்த சிறுவனிடம் நீ இப்போதெல்லாம் கோபம் கொள்வதில்லை அனால் நீ கொபம் கொண்டதனால் உண்டான இந்த சிறு துளைகள் போன்ற வடுக்களை எப்படி போக்குவாய் என்றார். 

அப்போது தனது தவறை உணர்ந்த அந்த சிறுவன் மனம் வறுந்தினான்.

ஆபத்துக்கள்:
தவறான முடிவு எடுத்தல்
ப்கைமை உண்டாகுதல்
நரம்பு தளர்ச்சி
இருதய நோய்கள்

என்ன செய்ய வேண்டும்:
  1. தியானம்
  2. யோகா
  3. ஒரு தலையனையை எடுத்து எப்போதெல்லாம் கோபம் வருகின்றதோ அப்போதெல்லாம் அந்த தலையனையை நல்லா அடியுங்கள், துவைத்து எடுங்கள் (வெறும் கையால்). யார் மேல் கோபம் வருகின்றதொ அவரை உருவகம் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment